இஸ்ரேலில் வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹுயின் (Benjamin Netanyahu) கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதத்தில் இந்நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எந்தவொரு கட்சியும் ஆட்சி அமைக்க முடியாமல் போனதால், தற்போது 3வது முறையாக நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது.
மொத்தம் 120 இடங்கள் கொண்ட அந்நாட்டின் பாராளுமன்றத்தில் 59 இடங்களை பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹுயின் லிக்யூட் (Likud) கட்சிக்கு கிடைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறுதிப் பெரும்பான்மை பெற இன்னும் ஒரு இடம் மட்டுமே இருப்பதால், தற்போதே அந்த கட்சி வெற்றிக்களிப்பில் உள்ளது. அந்த வகையில் பிரதமர் நேதன்யாஹு தனது மனைவி மற்றும் ஆதரவாளர்களுடன் இணைந்து உற்சாகத்துடன் பைபளிலுள்ள சாம் 147வது பாடலை பாடும் காட்சி வெளியாகி உள்ளது.