நேபாள பிரதமர் சர்மா ஒலி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காத்மண்டுவில் உள்ள திருபுவன் பல்கலைக்கழக மருத்துவமனையில் நாளை அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. இதுதொடர்பாக சமூகவலைதள வீடியோவில் அவர் கூறுகையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்த பிறகு தம்முடைய பணியை புத்துணர்ச்சியுடனும் உற்சாகத்துடனும் செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.
69வயதாகும் சர்மா ஒலிக்கு இரு சிறுநீரகங்களும் பழுதானதை அடுத்து 2007ல் இந்தியாவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.
இதற்கிடையில், நேபாள பிரதமர் விரைவில் பூரண குணமடைந்து நலமுடன் பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.