மலேஷியப் பிரதமர் பதவியில் இருந்து விலகிய மாகாதிர் முகமது மீண்டும் பதவியை கைப்பற்ற தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளார்.
அன்வர் இப்ராகிமின் மக்கள் நீதிக் கட்சி ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்திருந்த மகாதிர் முகமது அன்வருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து கடந்த திங்கட் கிழமை பதவி விலகினார். இந்நிலையில் புதிய பிரதமராக முன்னாள் உள்துறை அமைச்சரான முகைதீன் யாசின் பதவியேற்றுள்ளார்.
இது சட்ட விரோதம் என்று தெரிவித்துள்ள மகாதிர் முகமது மொத்தம் 222 உறுப்பினர்களை கொண்ட மலேஷிய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை விட அதிகமாக தனக்கு 114 உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் அவரால் பெயர் குறிப்பிடப்பட்ட சில உறுப்பினர்கள் தாங்கள் மகாதிருக்கு ஆதரவு என கூறுவதை மறுத்துள்ளனர்.