இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு விரைவில் குழந்தை பிறக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 55 வயதான போரிஸ் ஜான்சனும் 31 வயதான கேரி சைமண்டசும் இதுவரை திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அவருக்கு கோடைகால துவக்கத்தில் குழந்தை பிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. முன்னதாக இருவரும் நேற்று நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நிலையில் இத்தகவலை தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம், கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன், பதவியிலிருக்கும்போது, திருமணம் செய்யும், முதலாவது இங்கிலாந்து பிரதமர் என்ற பெருமையை பெற உள்ளார்.