ஈரானில் கொரோனா தாக்குதலுக்கு 210 பேர் இறந்ததாக வந்த செய்தியை அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஈரானில் இதுவரை 210 பேர் இறந்துள்ளதாக தனியார் பத்திரிக்கை செய்திகள் வெளியிட்டு இருந்தது இதனால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் இருந்தனர். இந்த தகவலை ஈரான் நாட்டு அரசு மறுத்துள்ளது.
இதுகுறித்து ஈரான் சுகாதாரத்துறையின் செய்தித் தொடர்பாளர் கியானுஷ் ஜஹான்பூர் கூறுகையில் ஈரானில் இதுவரை கொரோனா பாதிப்பிற்கு 34 பேர் மட்டுமே இறந்துள்ளதாகவும், மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 8 பேர் மட்டுமே இறந்துள்ளதாகவும், அதுமட்டுமல்லாது கொரோனா வைரஸ் பாதிப்புகளை வெளியிடுவதில் ஈரான் வெளிப்படைத்தன்மையுடன் முன்மாதிரியாக உள்ளதாகவும் கூறினார்.
மேலும் ஈரானின் எதிரிகள் ஈரான் குறித்து தொடர்ந்து பொய் புகார்களை பரப்புவதாகவும் குறிப்பிட்டார்