சீனாவுக்கு அடுத்ததாக தென்கொரியாவில் கொரானா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
சீனாவில் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அந்நாட்டை மட்டுமின்றி பிற நாடுகளுக்கும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தென் கொரியாவில் குறிப்பாக டீகு நகரத்தில் தீவிரமடைந்துள்ள கொரானா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் 594 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், தென் கொரியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 931 ஆக உயர்ந்துள்ளது.