பிரிட்டன் நாட்டின் வொர்ஸ்டெர் பகுதியில் பெய்த கனமழையால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
அடுத்த சில தினங்களில் அப்பகுதியில் மீண்டும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் ஓடும் செவர்ன் ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வொர்ஸ்டெர், பீவெட்லீ மற்றும் ஷ்ரூஸ்பரி பகுதிகளில் கடந்த 26ந் தேதி பெய்த கனமழையால் வினாடிக்கு 500 டன் வீதம் வெள்ளம் பாய்ந்தோடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.