பாகிஸ்தானில் சிந்து மாநிலத்தில் பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 30 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கராச்சியில் இருந்து பஞ்சாப் நோக்கி பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ் ரயில் நூற்றுக்கணக்கான பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. ரோஹ்ரி நகர் அருகே காந்த்ரா என்ற இடத்தில் ஆளில்லா ரயில்வே கிராசிங்கை பேருந்து ஒன்று கடக்க முயன்றபோது அந்த ரயில் மோதியது. இந்த விபத்தில் 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் பலர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த தும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டனர்.