அமெரிக்க விமானத்தின் மீது சீனப் போர்க்கப்பல் லேசர் ஒளிக்கற்றையைச் செலுத்தியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
பசிபிக் பெருங்கடலில் அமெரிக்காவுக்குச் சொந்தமான ஹவாய்த் தீவு உள்ளது. இப்பகுதியில் பறந்த அமெரிக்கக் கடற்படையின் விமானத்தின் மீது, சீனப் போர்க்கப்பலில் இருந்து அபாயகரமான லேசர் ஒளிக்கற்றை செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது அபாயகரமான மற்றும் முறையற்ற செயல் அமெரிக்கக் கடற்படை தெரிவித்துள்ளது. இந்த லேசர் ஒளிக்கற்றை விமானத்துக்கும் அதில் உள்ளவர்களுக்கும் கடும் தீங்கு விளைவிக்கக் கூடியது என்றும் சீனா குறிப்பிட்டுள்ளது.
பசிபிக் மண்டலத்திலும் தென்சீனக் கடல் பகுதியிலும் உலவும் சீனப் போர்க்கப்பல்கள் அப்பகுதியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.