ஹாரி மற்றும் மேகன் தம்பதிக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை திரும்ப பெறுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது.
இங்கிலாந்து அரசக் குடும்பத்தில் இருந்து வெளியேறி கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வசித்து வரும் ஹாரி தம்பதி, மார்ச் 31 ஆம் தேதி முதல் அரச பதவிகளில் இருந்து முற்றிலும் விலக உள்ளனர். இந்த நிலையில் சர்வதேச அளவில் பாதுகாக்கப்பட்ட நபர்கள் என்ற காரணத்தினால் ஹாரி தம்பதிக்கு அளித்து வந்த சிறப்பு பாதுகாப்பை மார்ச் 1 ஆம் தேதியுடன் நிறுத்திக்கொள்ள போவதாக கனடா போலீசார் தெரிவித்துள்ளனர்.
அரசக் குடும்பத்தில் இருந்து வெளியேறிய தம்பதிக்கு தங்கள் வரி பணத்தில் பாதுகாப்பு வழங்க பெரும்பாலான கனடா மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.