இந்தியாவில் டிக்டாக் மோகம் தலைக்கேறியுள்ள நிலையில், உலக வல்லரசான அமெரிக்காவிலும் சிறிது சிறிதாக டிக்டாக் மோகம் அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் டிக்டாக் செயலி 1.5 பில்லியன் அளவிற்கு பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தது. App Store மற்றும் Google Play Store இரண்டிலும் அதிக அளவில் டிக் டாக் செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் இந்தியாவிலிருந்து மிக அதிக அளவில் டிக் டாக் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் நடப்பாண்டில் ஜனவரி மாதம் அமெரிக்காவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள் பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில் 7.7 மில்லியன் பதிவிறக்கங்களுடன் டிக் டாக் முதலிடத்தில் உள்ளது. App Store மற்றும் Play Store என இரண்டிலுமே டிக் டாக் தான் டாப்பில் உள்ளது.
கடந்த ஆண்டின் எண்ணிக்கையை விட தற்போது 28.8 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக Disney + செயலி 6.8 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டு இரண்டாவது இடத்தில் உள்ளது. Instagram, Facebook Messenger மற்றும் Netflix முறையே மூன்று, நான்கு, ஐந்தாவது இடங்களை பிடித்துள்ளன.