இங்கிலாந்து இளவரசர் ஹாரி, அரச பரம்பரையின் அடைமொழியை முற்றாக விட்டொழித்துள்ளார்.
இனி, தன்னை வெறுமனே, ஹாரி என்று அழைத்தால் மட்டும் போதும் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த மாத த்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட அவர், அரச கடமைகளில், படிப்படியாக, ஹாரி தன்னை விடுவித்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், ஸ்காட்லாந்தின் (Scotland) எடின்பரோ (Edinburgh) நகரில் நடைபெற்ற சுற்றுலா மாநாடு ஒன்றில் பங்கேற்றுப் பேசிய ஹாரி, தன்னை இனி, அரச குடும்ப அடைமொழியோடு அழைக்க வேண்டாம் என்றார். அந்த நடைமுறையை முற்றாக கைவிடுமாறும், ஹாரி வலியுறுத்தினார். தனது பெயரை குறிப்பிட்டு மட்டுமே அழைக்க வேண்டும் என்றும், அதுவே போதுமானது என்றும் ஹாரி அன்போடு கேட்டுக்கொண்டிருக்கிறார்.