'ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் சீனாவை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு சீனாவில் இயங்கி வரும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் எனும் பத்திரிக்கையின் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்ட அந்த கட்டுரையில், கொரானா தொடர்பாக தொடக்கத்தில் சீனா சரிவர செயல்படவில்லை என விமர்சிக்கப்பட்டிருந்தது.
இதனால் ஆத்திரமடைந்த சீன அரசு அமெரிக்காவை சேர்ந்த இரு செய்தியாளர்களும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த மற்றொரு செய்தியாளரும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது.
இதையடுத்து அமெரிக்காவை சேர்ந்த இரு செய்தியாளர்கள் மட்டும், தங்கள் நாட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.சீனாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, அங்குள்ள சீன பத்திரிகைகளுக்கும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.