பிரான்சில் மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய பிரான்சின் சுகாதாரத்துறை அமைச்சர் ஜெரோம்சாலமன், சீனாவில் இருந்து பிரான்சுக்கு வருகை தந்த பெண் ஒருவர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது என்றார்.
அதுபோல் இத்தாலியில் இருந்து வந்த நபரும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் இது வரை 14பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.