கிரீஸில் அகதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது.
அந்நாட்டில் உள்ள சியோஸ் என்ற இடத்தில் அகதிகளுக்கான முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கூடுதலாக கட்டுமானப் பணிகள் நடந்தன. இதற்கு அகதிகள் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. மேலும் முகாம்களில் தங்களை சுதந்திரமாக அனுமதிக்கக் கோரியும் அகதிகள் போராட்டத்தில் இறங்கினர்.
இதையடுத்து அகதிகள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அகதிகள் போலீசார் மீது பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் சாலைகளில் கட்டைகளையும், டயர்களையும் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் மிளகுப் பொடி ஸ்பிரே தூவி போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தினர்.