ஈரானில் கொரானா வேகவேகமாக பரவி வருவதால், அண்டை நாடான ஈராக், முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த வகையில், ஏற்கனவே, சீனா மற்றும் ஈரானில் இருந்து பயணிகள் வருவதற்கு, தடை உள்ள நிலையில், தற்போது, அந்த பட்டியலில், மேலும், 5 நாடுகளை, ஈராக் இணைத்திருக்கிறது.
தாய்லாந்து, தென்கொரியா, ஜப்பான், இத்தாலி, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து, தங்கள் நாட்டிற்கு, தற்போதைக்கு, யாரும் வரவேண்டாம் என ஈராக் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில், இத்தாலியில் கொரானா பரவி வருவதன் எதிரொலியாக, பிரான்ஸ் அரசு, நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்து, இத்தாலியின் மிலன் நகருக்குச் சென்று திரும்பு ரயில்களில், பிரான்ஸ் எல்லை வரை ஒரு ஓட்டுநரும், அதன்பிறகு இத்தாலி வரை மற்றொரு ஓட்டுநரும் பணி அமர்த்தப்படுகிறார்கள்.