கிரீஸ் நாட்டின் லெஸ்போஸ்(Lesbos) தீவில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தில் பல கட்டிடங்கள் தீக்கிரையாகின.
துருக்கியில் இருந்து ஐரோப்பாவுக்கு கிரீஸ் வழியே புலம்பெயருவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் அதிகரித்துள்ளது. இதன்பொருட்டு லெஸ்போஸ்(Lesbos), சியோஸ்(Chios), சமோஸ்(Samos), கோஸ்(Kos) மற்றும் லெரோஸ்(Leros) தீவுகளில் புலம்பெயர்ந்தோருக்கு முகாம்கள் கட்ட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் லெஸ்போஸ் துறைமுகத்தில் கட்டுமானப் பொருட்களை இறக்க எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வன்முறை மூண்டது.