மலேசியாவில் மகாதீர் முகமது பதவி விலகியதைத்தொடர்ந்து, அந்நாட்டின் புதிய பிரதமரை தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது .
மலேசியாவில் ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட பிளவு காரணமாக பிரதமர் பதவியில் இருந்து 94 வயதான மகாதீர் முகமது, நேற்று ராஜினாமா செய்திருந்தார். இந்த நிலையில் மலேசிய எம்பிக்களுடன் ஆலோசனையை துவக்கிய மன்னர், ஓரிரு நாளில், புதிய பிரதமரை தேர்வு செய்வார்.
தற்போதைய சூழலில், மீண்டும் பதவியை பிடிக்க மகாதீர் முகமதுவும், பதவியை தட்டிப்பறிக்க மக்கள் நீதிக்கட்சியின் அன்வர் இப்ராஹீமும் பலப்பரீட்சையில் இறங்கி உள்ளனர்.
--
((Reuters : 2023))