கொரோனா வைரஸ் பீதி காரணமாக தென்கொரிய நாடாளுமன்ற கட்டிடம் முழுவதும் மருந்து தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது.
சீனாவிலிருந்து அதன் அண்டை நாடான தென்கொரியாவிலும் கொரோனா வைரஸ் பரவி மக்கள் உயிரிழந்து வருகின்றனர். வைரஸ் அறிகுறி கொண்ட கல்வி அதிகாரியை 3 எம்பிக்கள் சந்தித்து பேசியது அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நாடாளுமன்ற கூட்டத் தொடர் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. நாடாளுமன்ற கட்டிடம் உடனடியாக மூடப்பட்டு, பாதுகாப்பு உடையணிந்த ஊழியர்களை கொண்டு மருந்து தெளித்து சுத்தபடுத்தப்பட்டது.