கொரானா வைரஸ் பீதி காரணமாக அர்ஜென்டினா நாட்டின் மாட்டிறைச்சி ஏற்றுமதி மூன்றில் ஒரு பங்கு சரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அர்ஜென்டினாவிடம் இருந்து மாட்டிறைச்சி வாங்கும் நாடுகளில் சீனா முன்னிலை வகித்து வந்தது. இந்த நிலையில் கொரானா வைரஸ் தாக்கத்தால் சீனா துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல சரக்கு கப்பல்கள் மற்ற நாடுகளுக்கு திருப்பி விடப்படுவதால் மாட்டிறைச்சி இறக்குமதி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதன் விளைவாக கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவு 31 ஆயிரம் டன்னாக மாட்டிறைச்சி விற்பனை குறைந்துள்ளதாக அர்ஜென்டினா ஏற்றுமதி துறை தலைவர் மரியோ ரவெட்டினோ (Mario Ravettino) தெரிவித்துள்ளார்.