அமெரிக்காவின் புளோரிடா காடுகளில் கடந்த 50 ஆண்டுகளில் முதன்முறையாக அரியவகை வானவில் பாம்பு கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனம் பதிவிட்டுள்ள பேஸ்புக் பதிவில், ஓர்லாண்டோவிற்கு((Orlando)) வடக்கே 47 மைல் தொலைவில் உள்ள ஓக்காலா வனப்பகுதியில் டிரேசி கவுதென் என்பவர் நடைபயணம் மேற்கொண்டபோது வண்ணமயமான 4 அடி நீள வானவில் பாம்பை கண்டதாக குறிப்பிட்டுள்ளது.
பெரும்பாலும் நீர்வாழ் தாவரங்களில் மறைந்து வாழும் இந்த வானவில் பாம்புகள், தீங்கு விளைவிக்காதவை என்றும் எப்போதாவது அரிதாக நிலப்பரப்பிற்கு வருவதாகவும் உயிரியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.