தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவில் உள்ள கோச்சபம்பா(Cochabamba) நகரின் வீதிகளில் சேறும் சகதியுமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அந்நாட்டில் கடந்த சில மாதங்களாக பெய்து வரும் கனமழையால் டாக்கினா நதியில்(Taquiña River) வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. இதில் பல கட்டுமானங்களும் வீடுகளும் முற்றிலும் சேதமடைந்தன.
பொலிவியா அதிபர் ஜீனைன் அனெஸ் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்து, மீட்பு பணிகளை துரிதப்பட்டுத்தியுள்ளனர்.