கொரானா வைரஸ் அச்சம் காரணமாக துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஜப்பான் சொகுசு கப்பலில் இருந்து 23 பேர் உரிய மருத்துவ பரிசோதனை செய்யப்படாமல் வெளியேறியதாக அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பயணிகள், ஊழியர்கள் என சுமார் 3,700 பேர் பயணித்த ஜப்பானின் டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில், 8 இந்தியர்கள் உள்பட சுமார் 600 பேருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில், பிப்ரவரி 5ஆம் தேதிக்கு முன்னர் பரிசோதனை செய்யப்பட்ட 23 பேர், மறு பரிசோதனை செய்யப்படாமலேயே கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டதாக ஜப்பான் சுகாதார துறை அமைச்சர் கட்சுனோபு கட்டோ தெரிவித்துள்ளார். நிர்வாக குறைபாடு காரணமாக நடந்த இந்த தவறுக்காக வருந்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.