விமானத்தில் பயணிப்போர் தங்கள் இருக்கையை ஸ்லீப்பர் பெர்த் போல கருதி, பின்னால் இருப்பவர்களுக்கு தொந்தரவு அளிக்கக்கூடாது என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் முன்னால் இருந்த பெண்மணி தனது இருக்கையை பின்பக்கம் சரித்ததால் கோபமடைந்த பின்வரிசை பயணி, ஆத்திரத்துடன் அந்த இருக்கையை பலமுறை குத்திய காட்சி இணையத்தில் வைரலானது.
இதனால் விமானங்களில் சாயும் இருக்கைகள் தேவையா வேண்டாமா என்ற விவாதமும் எழுந்துள்ளது. இந்த நிலையில் இருக்கையை பின்னால் சாய்ப்பது என்பதை ஒரு ஆசாரமாக கருதாமல், நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் டுவிட்டரில் கூறியுள்ளது.
அதையும் மீறி இருக்கையை சாய்க்க விரும்பினால், பின்னால் இருப்பவர்களையும் ஒரு கணம் மனதில் நினைத்துக் கொள்ளுமாறு அறிவுரையும் விடுக்கப்பட்டுள்ளது.