அமெரிக்காவின் அலாஸ்கா வனத்தில் வாழும் கிரிஸ்லி பழுப்பு நிற கரடிகளை வேட்டையாடுவதற்காக அதிபர் ட்ரம்பின் மகன் ஆயிரம் டாலர் கட்டணம் கட்டி அனுமதி பெற்றுள்ளார்.
மான்கள், கரடிகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு அந்நாட்டு அரசு குறிப்பிட்ட கால இடைவெளியில் அனுமதி வழங்குகிறது. அந்த வகையில் வடமேற்கு அலாஸ்காவின் சீவர்ட் (Seward) பிராந்தியத்தில் 27 இடங்களில் வேட்டையாடுவதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்தவர்களில், டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் உள்பட 3 பேர் தேர்தெடுக்கப்பட்டுள்ளதாக வனபாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
வேட்டையாடுவதில் அதிக ஆர்வம் கொண்ட டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர், இது தொடர்பாக பல்வேறு பயணங்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.