உலக அளவில் பிரபலமான பிரண்ட்ஸ் தொலைக்காட்சி தொடரின் சிறப்பு பாகம் ஒன்றை வெளியிட உள்ளதாக வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது, டிவிட்டரில் டிரெண்டாகியுள்ளது.
கடந்த 1994ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை அமெரிக்காவில் ஒளிபரப்பான பிரண்ட்ஸ் தொலைக்காட்சி தொடர் பத்து சீசன்களை கொண்டது. ஜெனிபர் அனிஸ்டன் உள்ளிட்டோர் நடித்து உலக அளவில் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ள இந்த பிரண்ட்ஸ் தொடரின் 11வது சீசன் எப்போது வரும் என்று அனைவரும் காத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் சுமார் 15 வருடங்களுக்கு பிறகு இத் தொடரின் சிறப்பு பாகம் ஒன்றை தயாரித்து வெளியிட வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து பிரண்ட்ஸ் ரீயூனியன் என்று ட்விட்ரில் டிரெண்டாகி வருகிறது.