ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, தலிபான் பயங்கரவாதிகள் இடையேயான ஒருவார கால சண்டை நிறுத்தம் (week-long partial truce) அமலுக்கு வந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் மீது 2001ம் ஆண்டு போர் தொடுத்து தலிபான்களை அமெரிக்க கூட்டணி படை ஆட்சியிலிருந்து அகற்றியது. இருப்பினும் ஆப்கானிஸ்தான் படை மீதும், அமெரிக்க கூட்டணி படை மீதும் தலிபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தனர்.
இதையடுத்து வன்முறைக்கு முடிவுகட்டி, அமைதியை ஏற்படுத்துவது குறித்து தலிபான்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அப்போது முதலில் சுமார் ஒரு வார காலத்துக்கு சண்டை நிறுத்தம் செய்யவும், பிறகு 29ம் தேதி அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் இருதரப்பினரும் ஒப்புக் கொண்டனர். இதன்படி ஒரு வாரகால சண்டை நிறுத்தம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.