மெக்சிகோவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்களை கண்டித்து பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
கடந்த ஆண்டு மட்டும் சராசரியாக ஒரு நாளைக்கு 10 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி ஏராளாமானோர் அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
அண்மையில் 7 வயது சிறுமி பாத்திமா சிசிலியா ஆல்ட்ரிகெட்(Fatima Cecilia Aldrighett) கொல்லப்பட்டதை கண்டித்து டிஜுவானாவில்(Tijuana) இருந்து சான் டியாகோவிற்கு(San Diego) பேரணியாக சென்ற பெண்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் கலவரம் மூண்டது.