பாகிஸ்தானை தொடர்ந்து சாம்பல் நிறப் பட்டியலில் வைத்திருக்க சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பான FATF முடிவு செய்துள்ளது.
பாரீசில் நடைபெற்ற அந்த அமர்வின் கூட்டம் கடந்த 14ம் தேதி தொடங்கி இன்று முடிவடைகிறது. இதில் தீவிரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி கிடைப்பதைத் தடுக்க சட்டங்களை கடுமையாக்கும்படி பாகிஸ்தானுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆய்வுக் கூட்டத்தின் போது பாகிஸ்தானுக்கு தீவிரவாத நடவடிக்கை தொடர்பாக விதிக்கப்பட்ட 27 நிபந்தனைகளில் பதினான்கு நிபந்தனைகளை மட்டுமே பாகிஸ்தானால் நிறைவேற்ற முடிந்தது.
இதனால் ஜூன் மாதம் வரை பாகிஸ்தானுக்கு மேலும் அவகாசம் அளித்து கிரே லிஸ்ட்டில் வைக்க நிதி கண்காணிப்பு அமைப்பு முடிவு செய்துள்ளது. அதற்குள் நிபந்தனைகளை பாகிஸ்தான் நிறைவேற்றா விட்டால் அது எந்த ஒரு சர்வதேச நிதி உதவியையும் பெற முடியாத கருப்புப் பட்டியலுக்கு தள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.