இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சோமாலியாவைத் தொடர்ந்து தற்போது கென்யாவையும் வெட்டுக்கிளிக் கூட்டம் தாக்கியுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன் பாகிஸ்தானில் வெட்டுக்கிளிக் கூட்டம் விளைநிலங்களைத் தாக்கி அழித்ததால் அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அங்கிருந்து கடல் கடந்து ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்ற வெட்டுக்கிளிக் கூட்டம் அங்கும் விளைநிலங்களையும், மேய்ச்சல் நிலங்களையும் கபளீகரம் செய்து வருகிறது.
லோகஸ்ட்ஸ் வெட்டுக்கிளியால் ஏற்கனவே சோமாலியா, எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளில் பல்லாயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பை அழித்ததால் அங்கு கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் லாகஸ்டஸ் கூட்டம் தற்போது கென்யாவில் முகாமிட்டுள்ளதால், அங்குள்ள மக்கள் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர்.
இதையடுத்து விமானம் மூலம் மருந்து தெளிக்கப்பட்டு வெட்டுக் கிளிகளைக் கட்டுப்படுத்தும் பணிகளில் கென்ய அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது.