கொரோனா பாதிப்பால் ஜப்பானில் நிறுத்தப்பட்டிருந்த டைமண்ட் பிரின்சஸ் கப்பல் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் முடிந்து கப்பலிலிருந்து வெளியேற துவங்கியுள்ளனர்.
ஹாங்காங் சென்று திரும்பிய கப்பல் கொரானா பாதிப்பால் முதியவர் ஒருவர் பலியானதை அடுத்து, கடந்த 3ம் தேதி முதல் யோகோகாமா பகுதியில் தனிமைபடுத்தப்பட்டிருந்தது. அதிலிருந்து 3700 பயணிகளில் 6 இந்தியர்கள் உட்பட 542 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கப்பலின் கண்காணிப்பு காலம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.
14 நாட்கள் தனிமைபடுத்துதல் முடிந்து பயணிகள் வெளியேற துவங்கியுள்ளனர். அதே சமயம் கடைசி பயணியும் வெளியேறிய பின்னரே, கப்பலின் ஊழியர் குழுவினருக்கு கண்காணிப்பு காலம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 134 இந்தியர்கள் உள்ளிட்ட ஊழியர் குழுவினர், மேலும் 14 நாட்களுக்கு தனிமைபடுத்தப்பட்டு கண்காணிப்பட உள்ளனர்.