அமெரிக்க அதிபராக தேர்வானால் ப்ளும்பெர்க் நிறுவனத்தை விற்றுவிடுவேன் என்று அந்நிறுவன அதிபர் மைக்கேல் ப்ளும்பெர்க் (Michael Bloomberg) அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கான ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான போட்டியில் மைக்கேல் ப்ளும்பெர்க்கும் களத்தில் உள்ளார்.
நியூயார்க் நகர முன்னாள் மேயரான அவர், அதிபராக தேர்வு செய்யப்பட்டால், ப்ளும்பெர்க் நிறுவனத்தை விற்றுவிடுவேன் என அதிரடியாக அறிவித்துள்ளார்.ப்ளும்பெர்க் உலக அளவில் செய்திகளையும், பைனான்சியல் தகவலையும் அளிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2019ம் ஆண்டில் மட்டும் சுமார் 71 ஆயிரத்து 593 கோடி ரூபாய் ( $10 billion in revenue) வருவாய் ஈட்டியிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.