தீவிரவாதிகளுக்கு நிதி உதவி கிடைப்பதைத் தடுக்க சட்டத்தைக் கடுமையாக்கும்படி பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பான FATF வலியுறுத்தியுள்ளது.
பாரீசில் நடைபெற்று வரும் கூட்டத்தில் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் மீது எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. FATF அளித்திருந்த 27 பரிந்துரைகளில் 14 அம்சங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், தீவிரவாதக் குழுக்களுக்கு நிதி உதவி கிடைப்பதைத் தடுக்க பாகிஸ்தான் சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் குறித்து FATF முடிவெடுக்க உள்ள நிலையில், அந்நாட்டிற்கு விதிக்கப்பட்ட சாம்பல் பட்டியல் நீடிக்கும் என்றே தற்போதைய சூழ்நிலை உணர்த்துகிறது.