இணையத்தில் வைரல் ஆகிவரும், உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய ஸ்கல் பிரேக்கர் என்ற சேலஞ்சை யாரும் மேற்கொள்ளவேண்டாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஸ்கல் பிரேக்கர் என்ற சேலஞ்சில் சிலர் ஈடுபட்டுவருகின்றனர். இரண்டு பேர் இரு பக்கவாட்டில் நின்றுகொண்டு நடுவில் நிற்பவரின் கால்களை கீழே தட்டிவிட்டு அவர் தரையில் நிலைகுலைந்து விழுவதே இந்த சேலஞ்ச் ஆகும்.
இதுபோன்ற சேலஞ்ச்களில் ஈடுபடும்போது தலையின் பின்புறம் பாதிக்கப்படுவதோடு எலும்பு முறிவு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.