உலகையே கதி கலங்க செய்துள்ள கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார மையத்தின் எச்சரிக்கை வெளியாகி இன்றுடன் 50 நாட்கள் நிறைவு பெற்றது.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைக்கட்டியிருந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி, சீனாவின் ஊகான் நகரில் நிமோனியா போன்ற வைரஸ் தொற்று அதிவேகத்தில் பரவுவதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்தது. கொரானா என்று பெயரிடப்பட்ட அந்த வைரஸ் தொற்று, 1700க்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்து உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவை புரட்டி போட்டுள்ளது.
இதுமட்டுமின்றி 12 நாடுகளுக்கு பரவியுள்ள கொரானா வைரசால், ஜப்பான், ஹாங்காங், பிலிப்பைன்ஸ், பிரான்ஸ் மற்றும் தைவான் நாடுகளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மற்ற நாடுகளிடம் இருந்து சீனா தனிமைப்படுத்தப்பட்டு பெரும் பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது.