ஜப்பானில் தனிமைபடுத்தப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள அமெரிக்கர்களில் 40 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹாங்காங் சென்று திரும்பிய அந்த கப்பல் கொரானா பாதிப்பால் முதியவர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து யோகோஹோமா பகுதியில் தனிமைபடுத்தப்பட்டுள்ளது. தற்போதுவரை அதிலுள்ள 355 பயணிகளுக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே கப்பலில் உள்ள அமெரிக்கர்களை மீட்டு அழைத்து செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க அதிகாரிகள், 40 அமெரிக்கர்களுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் அமெரிக்காவுக்கு மீட்டு அழைத்துச் செல்லப்பட மாட்டார்கள் என்றும், ஜப்பானிலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.