மாலத்தீவு கடல் பகுதியில் கழுத்தில் கயிறு இறுக்கப்பட்ட நிலையில் போராடிய பிரமாண்ட திமிங்கலம் காப்பாற்றப்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள ஃபுவாமுல்லா தீவின் அருகே திமிங்கலச்சுறா ஒன்று பெரிய அளவிலான கயிறு ஒன்று கடந்த டிசம்பர் மாதம் முதல் கழுத்தில் இறுக்கிய நிலையில் சுற்றி வந்தது தெரியவந்தது. மிகப்பெரிய மீன்பிடிக் கப்பலில் இருந்து அந்தக் கயிறு திமிங்கலத்தின் கழுத்தில் சிக்கியிருந்தது தெரியவந்தது.
இதனால் வாயைத் திறக்கமுடியாமலும், உணவு உண்ணமுடியாமலும், துடுப்பில் சிக்கியதால் வேகமாக நீந்தமுடியாமலும் திமிங்கலம் தவித்து வந்தது. இதனைக் கண்ட சில கடலடி ஆய்வாளர்கள் அதனை அகற்ற முடிவு செய்தனர். பின்னர் திமிங்கலத்தைப் பின்தொடர்ந்து சென்ற அவர்கள், நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் கயிற்றை அறுத்தெடுத்து அகற்றினர்.