இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்தில் டென்னிஸ் புயல் காற்றில் சிக்கி, தத்தித் தள்ளாடிய விமானத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அப்பகுதியில் மணிக்கு சுமார் 146 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசிய சமயத்தில், எடிஹட் ஏர்வேஸ் நிறுவனத்தை சேர்ந்த விமானம் தரையிறங்க முயன்றது. வீசிய காற்றில் சீராக நிலைகொள்ள முடியாமல் விமானம் முன்னும், பின்னும் தள்ளாடிக் கொண்டே மெதுவாக ஓடுதளத்தை அடைந்தது.
ஆனாலும், தொடர்ந்து வீசிய காற்றின் வேகத்தில் திசை திரும்ப, விமானம் மொத்தமாக ஓடுபாதையில் இருந்து விலகி சென்று நின்றது.