பிளாஸ்டிக் பாட்டில்களின் மூடிகளை கொண்டு பல வண்ணமயமான உருவங்கள்
ரஷ்யாவை சேர்ந்த பெண்மனி ஒருவர் பிளாஸ்டிக் பாட்டில்களின் மூடிகளை கொண்டு பல வண்ணமயமான உருவங்களை வடிவமைத்து தனது வீட்டின் சுற்றுச்சுவரில் அதனை பதித்துள்ளார்.
நின்னா கிரினிட்சினா (Nina Krinitsina) எனும் வயதான மூதாட்டி தனது உறவினரின் உதவியால் பிளாஸ்டிக் பாட்டில்களின் மூடிகளை கொண்டு உருவங்களை உருவாக்குவது குறித்து அறிந்துள்ளார்.
அதனை தொடர்ந்து பொழுதுபோக்காக பிளாஸ்டிக் பாட்டில்களின் மூடிகளை சேகரிக்க தொடங்கிய அவர் தனது வீட்டை சுற்றிலும் குதிரை, நாய், சேவல் போன்ற செல்லப்பிராணிகளின் உருவங்கள், சிறுவர்களுக்கு பிடித்தமான டொனால்டு டக், டெடி பேர்டு, மிக்கி மவுஸ் (DONALD DUCK, TEDDY BIRD, MICKY MOUSE ) போன்ற கார்டூன் கதாபாத்திரங்களின் உருவங்களையும் உருவாக்கி அதனை சுவற்றில் பதித்துள்ளார்.