மலேசியாவில் பிரமாண்டமான லாரியில் ஏற்றி வந்த கிரேன் இடித்ததில் பழமையான பாலம் முற்றிலும் சேதமடைந்தது. பினாங்கு பகுதியில் வெல்ட் குவாய் என்ற பாலம் கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
இரு சாலைகளின் மேற்பகுதியில் கட்டப்பட்டிருந்த இந்தப் பாலத்தின் அடிப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஏராளமான வாகனங்கள் கடந்து சென்று கொண்டிருந்தன. அப்போது கிரேன் ஏற்றி வந்த லாரி பாலத்தைக் கடக்க முயன்றபோது, கிரேனின் மேற்பகுதி 16 அடி உயரம் கொண்ட பாலத்தின் மீது இடித்தது.
இந்த விபத்தில் அந்தப் பாலம் முற்றிலும் சேதமடைந்தது. அப்போது லாரியின் பின்புறம் மற்ற வாகனங்களில் வந்தவர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.