எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தை அடைந்துள்ளது. தினந்தோறும் 12 மில்லியன் பேரல் உற்பத்தியால் உலகில் பல்வேறு மாறுதல்கள் நிகழ்கின்றன.
கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்கா இந்த வளர்ச்சியை அடைந்துவிட்டது. தினமும் 9 மில்லியன் பேரல் எண்ணெய் அமெரிக்காவில் இருந்து அதன் நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளிநாட்டு உற்பத்தியின் தேவையே இல்லாத நிலை அமெரிக்காவில் உருவாகியுள்ளது.
200க்கும் மேற்பட்ட சிறிய நடுத்தர எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் கடன்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து வால் ஸ்ட்ரீட் பங்குச் சந்தை எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிப்பதால் அமெரிக்காவின் வளர்ச்சியில் விரிசல்கள் தோன்ற ஆரம்பித்து விட்டன.