மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் நடந்த தாக்குதலில் 9 ராணுவ வீரர்கள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர்.
பதற்றமான இடங்களாக கருதப்படும் மத்திய மாலியில் பெரும்பான்மையாக வாழும் ஃபுலானி(Fulani) மற்றும் டோகோன்(Dogon) இன போராளிகளுக்கும் இடையே சண்டை நடப்பது தொடர்கதையாகியுள்ளதாக கூறும் அதிகாரிகள், ஓகோசாகோ(Ogossagou) என்ற இடத்தில் துப்பாக்கி ஏந்திய 30 பேர், வீடுகளுக்கு தீவைத்ததுடன் கண்மூடித்தனமாக சுட்டதில் ஃபுலானி இன மக்கள் 31 பேர் உயிரிழந்ததாக கூறினர்.
அதே போல் காவ் பிராந்தியம்(Gao region) மற்றும் மொன்டோரோவில் (Mondoro) ஃபுலானி வீரர்கள் அதிகம் உள்ள ராணுவ முகாம்கள் மீது டோகோன் குழு தாக்குதல் நடத்தியதில் 9 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg