ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
அந்த நாட்டின் டேஹுடி மாகாணத்திற்கு உள்பட்ட நிலி, மிரமூர், அஸ்டர்லே உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால், அப்பகுதிகளில் இருந்த பல வீடுகள் பனியால் மூடப்பட்டன.
மேலும், சில பகுதிகளில் இந்த பனிச்சரிவில் மக்களும் சிக்கிக்கொண்டனர். இந்த பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் பனிச்சரிவில் சிக்கித்தவித்த மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. இதில் மிரமூர் பகுதியில் 16 பேரும், அச்டர்லேபகுதியீல் 5 பேரும் அடங்குவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg