இந்தோனேசியா நாட்டில் எரிமலை ஒன்று வெடித்து சிதறி நெருப்பு குழம்பை வீசியெறியும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்தோனேசியாவின் ஜாவா பகுதியில் 40 எரிமலைகள் அமைந்துள்ளன. அதில் மெராபியிலுள்ள (MERAPI) எரிமலை நேற்று திடீரென வெடித்து சிதறியது. அப்போது எரிமலையில் இருந்து சுமார் 2 ஆயிரம் அடி உயரத்துக்கு வானத்தை நோக்கி நெருப்பு குழம்பும், சாம்பலும் வீசி எறியப்பட்டது.
எரிமலை சீற்றத்தின்போது அப்பகுதியே கடுமையாக குலுங்கியது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி அனைவராலும் அதிசயித்து பார்க்கப்படுகிறது.