கொரோனா வைரஸ் காரணமாக போட்டிகளை ரத்து செய்யும் திட்டமில்லை என்று டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24 ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் 11 வது ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றப் பின் செய்தியாளர்களை சந்தித்த ஐப்பான் முன்னாள் பிரதமரும் டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி தலைவருமான யோஷிரோ மோரி, கொரோனா வைரஸ் பரவுவதை சமாளிப்பதற்காக பிரத்யேக கமிட்டி ஒன்று அமைக்கப்படுள்ளதாக தெரிவித்தார்.
ஒலிம்பிக்கில் போட்டியிடும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் பார்வையாளர்களுக்கு கொரோனா நோய் இல்லை என்பதை கமிட்டி உறுதி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.