ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தீவிரவாதிகள் நடத்திய கொடூரமான தற்கொலைப் படைத் தாக்குதலில் நான்கு ராணுவ வீரர்கள் உள்பட ஆறு பேர் உயிரிழந்தனர்.
கடந்த ஆறுமாத காலமாக இத்தகைய தாக்குதல் நடக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இங்குள்ள மார்ஷல் ஃபாஹிம் ராணுவப் பயிற்சி பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் திடீரென தீவிரவாதிகள் நேற்றிரவு தாக்குதல் தொடுத்தனர். இத்தாக்குதலுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்தியா தனது இரங்கலை வெளிப்படுத்தியுள்ளது.