துருக்கியில் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட பீட்சாவில் உமிழ்நீரைத் துப்பியவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
எஸ்கிஷெகிர் என்ற இடத்தில் வாடிக்கையாளர் ஒருவருக்கு கொடுக்கப்பட வேண்டிய பீட்சாவில், அதனை விநியோகிக்கும் நபர் உமிழ்நீரை துப்பிய பின் வழங்கினார். அந்த அருவெறுப்பான நிகழ்வு அருகில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவானது.
கடந்த 2017ம் ஆண்டு நடந்த இந்த நிகழ்வில் பீட்சாவை வழங்கிய புராக் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கு அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்புக் கூறப்பட்டது.
அதன்படி புராக்குக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் ஏற்கனவே 6 மாதங்கள் சிறையில் இருந்த நிலையில் மீதமுள்ள 2 ஆண்டுகளையும் சிறையில் கழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.