கடந்த 20 ஆண்டுகளாக தங்கள் நாட்டுக்கு அமெரிக்க ராணுவம் வழங்கி வந்த பாதுகாப்பினையும், இரு நாட்டு ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தத்தையும் ரத்து செய்வதாக பிலிப்பைன்ஸ் அறிவித்துள்ளது.
தென் சீனக் கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த பிலிப்பைன்ஸ் அமெரிக்காவுடன் கைகோர்த்து நின்றது. இதன் காரணமாக பிலிப்பைன்ஸில் தனது ராணுவத்தளத்தை அமெரிக்கா அமைத்திருந்தது.
இந்நிலையில் இருநாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தம் முடிவு வருவதாக பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ கூறியதையடுத்து, அங்கு அமைக்கப்பட்டிருக்கும் ராணுவத் தளங்களையும் அகற்ற வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதற்கான அறிவிப்பு மணிலாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அடுத்து வரும் 180 நாட்களில் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.