நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்பட்டுள்ள தானியங்கி ரோபோ பொதுமக்கள் கவனத்தை பெற்றுள்ளது.
5 அடி உயர ரோபோவின் உடலில் பொருத்தப்பட்டுள்ள ஐபேட் மூலம், கொரானா வைரஸ் அறிகுறிகள் மற்றும் பரவாமல் தடுப்பது குறித்து பொதுமக்கள் தெரிந்துக்கொள்ளலாம். அதே சமயம் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை ரோபோவுடன் கலந்து உரையாடி நிவர்த்தி செய்துக்கொள்ளலாம்.
பென்சில்வேனியாவில் வணிக நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த ரோபோ, கொரானா வைரசால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும்பொருட்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.