இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிராக தொழிலதிபர் விஜய் மல்லையா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இங்கிலாந்து உயர் நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.
இந்தியாவில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்த விஜய் மல்லையா இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருந்து வருகிறார். இந்நிலையில் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
நாடு கடத்தப்படும் பட்சத்தில் அவர், மும்பை ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அடைக்கப்படுவார் என இந்தியா ஏற்கனவே நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தான் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து விஜய் மல்லையா இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.